Skip to main content

Posts

அடை தோசை சுடுவது எப்படி

Recent posts

கடைசி தலைமுறை

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் *ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான *செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...! *கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும *கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான் *ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான். *சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலை

இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்தது . நீர்வீழ்ச்சியின் அழகை , இரண்டு தேவதைகள் வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர் . அப்போது , அனீலஸ் என்ற பறவை , அந்த நீர்வீழ்ச்சியின் அருகே வந்தது . தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர் . "" அதோ பார் அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்துள்ளது ,'' என்றது ஒரு தேவதை . "" ஆமாம் ... ஆமாம் ... அனீலஸ் பறவை , பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் . அது நீராடுகிற காட்சியைக் காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . ஒரு வகையில் நாம் இருவருமே யோகம் செய்தவர்களாக இருக்கிறோம் ...'' என்றது மற்றொரு தேவதை . அனீலஸ் பறவையோ , தன் அருகே இரண்டு தேவதைகள் நின்று கொண்டிருப்பதை கவனித்தபடியே , பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது . அதே நேரத்தில் , நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது . நீர் வேகமாகத் தரையை நோக்கிப் பாயத் தொடங்கியது . வேகமாக இழுப்பு விசையோடு பாய்ந்த நீர் , அனீலஸ் பறவையையும்

ஆமை... ஆமை...

வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான் . "" வா ஆமையே ! வா ! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் . நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா ? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய் ! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன் ... ஹி ... ஹி ... ஹி ...'' என்று சிரித்தபடி , தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் வேடன் . வேடனைக் கண்டு ஆமை சற்றும் பயப்படவில்லை . "" வேடனே ! என்னைப் பிடிக்க நீ யார் ? என்னைப் பிடித்துக் கொன்று தின்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது ?'' என்று துணிச்சலுடன் வேடனைப் பார்த்து ஆமை கேட்டது . "" ஆமையே ! நான் உன்னை விட மேலான மனிதப் பிறவியில் இருப்பவன் . எனக்கு எல்லா சக்தியும் இருக்கிறது . உன்னைக் கொன்று தின்னவும் என்னால் முடியும் ! அதே நேரத்தில் உன்னை உயிரோடு விட்டுவிடவும் என்னால் முடியும் . "" எனது பெருமைகளைப்பற்றி உனக்கு எங்கே தெரியப்போகிறது ! நீ ஒர

ஞானகுரு!

ஒரு காட்டில் சிங்கம் , கரடி , நரி மூன்றும் நண்பர்களாக , ஒன்றாக வசித்தன . வேட்டையாட ஒன்றாகவே செல்லும் . வழக்கம் போல் ஒருநாள் , மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின . கிடைக்கும் இரையில் மூவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு . பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது . சிங்கம் ஒரே அடியில் அதை அடித்து வீழ்த்தியது . "" இந்த மானை பங்குப் போடு !'' என்று கரடிக்கு உத்தரவிட்டது சிங்கம் . கரடி மிகவும் சிரமப்பட்டு அந்த மானை மூன்று பங்காக்கியது . "" இதோ பங்குகள் தயார் !'' என்றது . சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது . "" சமமா ? எது சமம் ? யாருக்கு யார் சமம் ?'' என்று கேட்டு , கரடி மீது பாய்நது குதறியது சிங்கம் . ராஜ மரியாதை தெரியாத உனக்கு இந்தக் கதிதான் ,'' என்றது சிங்கம் . பின்னர் நரியைப் பார்த்து கட்டளையிட்டது சிங்கம் . "" இதைப் பங்கு போடு !'' நரி சிரமப்படவில்லை . எல்லாப் பங்கையும் சிங்கத்தின் முன்பே குவித்தது . தனக்கு முன்பு ஒரு மிகச் சிறிய

குரு சிஷ்யன்!

முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார் . இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான் . தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ , தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான் . குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு , " இவன் பூமிக்குப் பாரம் , சோற்றுக்குத் தெண்டம் ' என்று ஏளனம் பேசினர் . அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர் . சுவாமிகளின் பார்வையோ வேறுவிதமாய் இருந்தது . அவருடைய கண்ணுக்கு அந்த இளைஞன் ஞானானுபவத்தில் திளைப்பவனாகவே தெரிந்தான் . அவனுடைய அறிவு தீட்சண்யத்தை அவர் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார் . எனவே , தம்முடைய வாரிசாக அவனைக் கருதி வந்தார் . அன்று நள்ளிரவு நேரம் . குருநாதர் , தம்முடைய மாணவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார் . அங்கே அந்த இளைஞனை தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர் . அவர்களுக்குப் பக்கத்தில் , அவர்கள் படித்த புத்தகங்கள் கிடந்தன . அவனைத் தேடிக்கொண்டு வெளியே வந்தார் குருநாதர் . அவன் , கொடும்பனியில் நட்டநடு வழியில் படுத்திருந்தான் . அவனருகே

வசியமந்திரம் !

செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான் . அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை . அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள் .  அவன் சிறிது பணமும் , படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் . அவன் வெகு தூரம் நடந்து சென்றான் . வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது . அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான் . குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார் . அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது . அதை அடித்துக் கொன்றான் . சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார் . "" தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன் . அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும் ,'' என்றார் . அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது . "" அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள் ,'' என்றார் முனிவர் . அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்